/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.3,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
/
ரூ.3,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
ரூ.3,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
ரூ.3,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
ADDED : அக் 20, 2024 04:11 AM
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 3,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் செந்-தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார். இதையடுத்து, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், ஏழு தனியார் நிறுவ-னங்களின் வேலை வாய்ப்பு முகாம்களும், சிறிய அளவிலான, 53 வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.அதில், 5,071 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாவட்-டத்தில் அரசு வேளாண் கல்லுாரி, அரவக்குறிச்சியில் அரசு கலை கல்லுாரி என எண்ணற்ற பல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்-ளது. ஐ.டி. பார்க் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்-ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் கரூர் மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் வாழ்க்-கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாதம், 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரு-கிறோம்.
ஆட்சி பொறுப்பேற்ற, மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.