/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
/
கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
ADDED : மார் 17, 2025 04:14 AM
கரூர்: ''கல்லுாரி மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் திட்டம் அறி-விக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட தி.மு.க., அப்-பல்லோ மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. மின்-துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொடங்கி வைத்து பேசியதா-வது:
தமிழக பட்ஜெட்டில், மகளிருக்கு அதிக பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் என தொடர்ச்சியாக அடித்-தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக திட்டங்களை செயல்
படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர், தங்கு-வதற்காக தோழி மகளிர் விடுதி, புதிய சிட்கோ அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், இருதயம், நரம்பியல், பொது மருத்துவம் உள்ளிட்ட, 12 துறைகளை சார்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். 1,000க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனை பெற்றனர். மாநகராட்சி மேயர் கவிதா, மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்-பரசு, ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.