/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர்தல் பணிக்குழு ஆலோசனை 10ல் அமைச்சர் வேலு பங்கேற்பு
/
தேர்தல் பணிக்குழு ஆலோசனை 10ல் அமைச்சர் வேலு பங்கேற்பு
தேர்தல் பணிக்குழு ஆலோசனை 10ல் அமைச்சர் வேலு பங்கேற்பு
தேர்தல் பணிக்குழு ஆலோசனை 10ல் அமைச்சர் வேலு பங்கேற்பு
ADDED : நவ 04, 2025 01:16 AM
சேலம்,  தி.மு.க.,வின், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலர்கள், அமைச்சர் ராஜேந்திரன் (மத்திய) டி.எம்.செல்வகணபதி எம்.பி., ( மேற்கு), சிவலிங்கம் எம்.பி., (கிழக்கு)  ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்ட, 11 சட்டசபை தொகுதிகளில் பொறுப்பேற்றுள்ள, தி.மு.க., பகுதி தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும், 10ல் நடக்கிறது. சேலம் 5 ரோடு அருகே, கே.எம்.பி., திருமண மண்டபத்தில் காலை, 10:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான வேலு தலைமை வகிக்கிறார். எனவே, 11 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.