/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இலக்கை கடந்து உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பெருமிதம்
/
இலக்கை கடந்து உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பெருமிதம்
இலக்கை கடந்து உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பெருமிதம்
இலக்கை கடந்து உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பெருமிதம்
ADDED : ஜூலை 14, 2025 03:53 AM
கரூர்: ''இலக்கை கடந்து, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகி-றது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'முதல்வர் படைப்பகம்' கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்திபாலாஜி தொடங்கி வைத்தார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் பல வளர்ச்சி திட்டப்பணிகளை அறி-வித்து, அதற்கென நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மூன்று கோடி ரூபாய், 'முதல்வர் படைப்-பகம்' போட்டி தேர்வு படிப்பவர்கள் உதவும் வகையில் அமைக்-கப்படுகிறது. இதில், 2,152.50 சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்படைப்பகம் மூன்று தளங்களுடன் கட்டப்படவுள்ளது. மேலும், 'ஓரணியில் தமிழ்-நாடு' என்ற, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில், 10 நாட்களில், மூன்று லட்சம் என்ற இலக்கை கடந்திருக்கிறோம்.
தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை செய்கிறோம். தொடர்ந்து, 100 சதவீதம் வீடுகளுக்கு சென்று அரசின் திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா, மண்டல குழு தலைவர்கள் ராஜா, அன்பரசு, கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.