தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு சீல்: தலைவர்கள் சிலை மறைப்பு

எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு சீல்: தலைவர்கள் சிலை மறைப்பு

எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு சீல்: தலைவர்கள் சிலை மறைப்பு


ADDED : மார் 17, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கரூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பல்-வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த, தலைவர்களின் சிலைகளும் துணியால் மூடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல், 23ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும், 30ல் துவங்குகிறது. நேற்று முன்தினம் மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நன்னடத்தை விதி முறைகள் அமலில் உள்ளது. இதனால், நேற்று முன்தினம் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று கரூர் முத்துராஜபுரத்தில் உள்ள, கரூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகா-ரிகள் 'சீல்' வைத்தனர். பிறகு, நேற்று காலை கரூர் நகராட்சிக்குட்-பட்ட பகுதிகளில், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த, தலை-வர்களின் சிலைகளும் துணியால் மூடப்பட்டது.

* கிருஷ்ணராயபுரம் தனி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிருஷ்-ணராயபுரம், பழையஜெயங்கொண்டம், மாயனுார், மணவாசி, மகாதானபுரம், சேங்கல் ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் விளம்பர பேனர்களை சாலையோரங்களில் வைத்திருந்-தனர். நேற்று முன்தினம் மாலை முதல் தேர்தல் தேதி அறிவிக்கப்-பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்-ளது. அதன்படி சாலையோரங்களில் இருந்த, அரசியல் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும், பயணிகள் நிழற்கூடம் அருகில் வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ., பெயர் பலகை, எம்.பி., பெயர்

பலகைகள் மூடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us