ADDED : அக் 10, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூரில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மொபட்டை காணவில்லை என, போலீசில்
புகார் செய்யப்பட்டுள்ளது.
கரூர் கிழக்கு நேதாஜி தெருவை சேர்ந்தவர்
மணிகண்டன், 38. இவர் கடந்த, 19ல், கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, விநாயகர்
கோவில் முன்புறம், டி.வி.எஸ்., ஸ்கூட்டி மொபட்டை நிறுத்தி விட்டு
சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, மொபட்டை காணவில்லை. மர்ம
நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, மணிகண்டன் போலீசில்
புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
