ADDED : அக் 10, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தகவல் உரிமை சட்ட வார
விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
அதில்,
கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, தாசில்தார்
சண்முக பிரகாசம் தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற கல்லுாரி
மாணவ, மாணவியர் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு
அட்டைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். கரூர் தின்னப்பா தியேட்டர்
கார்னர், மனேகரா கார்னர், ஜவஹர் பஜார் வழியாக சென்ற பேரணி,
திருவள்ளுவர் மைதானத்தை அடைந்தது. பேரணியில், நுாற்றுக்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
