/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு கரூரில் நாளை மாதிரி தேர்வு,
/
காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு கரூரில் நாளை மாதிரி தேர்வு,
காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு கரூரில் நாளை மாதிரி தேர்வு,
காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு கரூரில் நாளை மாதிரி தேர்வு,
ADDED : அக் 14, 2025 01:55 AM
கரூர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில்காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு மாதிரி தேர்வு நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் வெண்ணைமலை வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பல்வேறு போட்டிகளுக்கு தேர்வு பயிற்சி வகுப்பு நடக்கிறது. தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 1,352 காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு வரும் டிச., 21ல் நடக்கிறது. இப்போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை நடக்கிறது. இதன்படி நாளை (15ம் தேதி) நடக்கும் மாதிரி தேர்வுக்கு, இன்று நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 63830 50010 89731 60980 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.