/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலைபுதுார் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.56.82 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

ADDED : அக் 14, 2025 01:54 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 56 லட்சத்து, 82 ஆயிரத்து, 823 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டத்தில் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. 16,290 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 53.39 ரூபாய், அதிகபட்சமாக, 68.41 ரூபாய், சராசரியாக, 66.89 ரூபாய்க்கு ஏலம் போனது. 5,577 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 3 லட்சத்து, 65 ஆயிரத்து, 559 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் கொப்பரை தேங்காய், முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 213.19, அதிகபட்சமாக, 223.08, சராசரியாக, 217.69, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 164.49, அதிகபட்சமாக, 223.60, சராசரியாக, 203.99 ரூபாய்க்கு ஏலம் போனது. 26,372 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 53 லட்சத்து, 17 ஆயிரத்து, 264 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 56 லட்சத்து, 82 ஆயிரத்து, 823 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.