/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு
/
'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு
'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு
'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு
ADDED : நவ 28, 2025 02:18 AM
சேலம், சேலத்தில், மாநகர் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி அமைப்பில், மறு சீரமைப்பு மேற்கொள்ள, கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
இதுகுறித்து, தேர்தல் பார்வையாளர் ேஷாபா ஹோஜா கூறியதாவது:
சேலம் மாநகர், மேற்கு மாவட்ட பார்வையாளரான நான், நிர்வாகி, தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறேன். மாவட்ட தலைவராக விண்ணப்பங்கள் பெற்று, அதில், 5 பேரை, கட்சி தலைமைக்கு பரிந்துரைப்பேன். அதிலிருந்து நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். மாவட்ட தலைவர் நியமனத்திலும், எஸ்.சி.,எஸ்.டி.,- ஓ.பி.சி., மகளிர் ஒதுக்கீடு பின்பற்றப்படும். பிரதமர் மோடி, ஒடிசா, பீகாரில் நடந்த தேர்தலின்போது, தமிழர்களை இழிவுபடுத்தி பேசிவிட்டு, தற்போது தமிழகத்தில் தேர்தல் வருவதால், உயர்வாக பேசி நாடகம் போடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.