/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே ரயிலில் தவற விட்ட பணம், தங்க நகைகள் மீட்டு ஒப்படைப்பு
/
கரூர் அருகே ரயிலில் தவற விட்ட பணம், தங்க நகைகள் மீட்டு ஒப்படைப்பு
கரூர் அருகே ரயிலில் தவற விட்ட பணம், தங்க நகைகள் மீட்டு ஒப்படைப்பு
கரூர் அருகே ரயிலில் தவற விட்ட பணம், தங்க நகைகள் மீட்டு ஒப்படைப்பு
ADDED : செப் 09, 2025 01:30 AM
கரூர், கரூர் அருகே, ரயிலில் தவற விட்ட பணம் மற்றும் தங்க நகையை மீட்டு, உரியவரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்திய நாராயணன், 62. தனியார் கப்பல் நிறுவனத்தில், பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில், கோச் எண் பி-2வில் மனைவி சுஜாதாவுடன் பயணம் செய்தார்.
நேற்று அதிகாலை குளித்தலை ரயில்வே ஸ்டேஷனில் சத்திய நாராயணன், மனைவி சுஜாதாவுடன் இறங்கினார். அப்போது சுஜாதா, ேஹண்ட் பேக்கை பணம், தங்க நகையுடன் ரயிலில் விட்டு விட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த நாராயணன் உடனே, குளித்தலை ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதற்குள் ரயில் புறப்பட்டு சென்றது. பின் ரயில்வே போலீசார், கரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கரூருக்கு வந்த ரயிலில் சுஜாதா தவற விட்ட, ேஹண்ட் பேக்கை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அதில், 15 பவுன் தங்க நகை, 5,770 ரூபாய் மற்றும் ஒரு மொபைல் போன் இருந்தது. அதை, கரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் எஸ்.ஐ., ராஜலட்சுமி, சுஜாதாவின் கணவர் நாராயணனிடம் ஒப்படைத்தார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உடனிருந்தனர்.