/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முருங்கை குளிர்பதன கிடங்கு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
முருங்கை குளிர்பதன கிடங்கு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
முருங்கை குளிர்பதன கிடங்கு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
முருங்கை குளிர்பதன கிடங்கு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 24, 2025 01:12 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், முருங்கைக்காய் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அரவக்குறிச்சி, கொத்தாம்பாளையம், தடாகோவில், வெஞ்சமாங்கூடலுார், அம்மாபட்டி, ஈசநத்தம், ஆலமரத்துபட்டி உள்ளிட்ட, 30க்கும் அதிகமான கிராமங்களில், 20,000 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும், இங்கிலாந்து, மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் முதல்போக விளைச்சலையும், ஜூன், ஜூலையில் இரண்டாம் போக விளைச்சலையும் கொடுக்கிறது. மற்ற காலங்களில் விலையில் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, விலை வீழ்ச்சியை சமாளிக்க அரவக்குறிச்சியில் இயற்கை மருத்துவம் நிறைந்த முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை அல்லது விளைச்சல் நேரங்களில் அவற்றை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைத்து தரவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: முருங்கை காய்களை வெளிமாநில வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்யும் வகையில் மலைக்கோவிலுார், இந்திரா நகர், பள்ளப்பட்டி, ஈசநத்தம் பகுதிகளில் சந்தை செயல்படுகிறது. சீசன் காலங்களில் வெளி மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு, 20 ஆயிரம் டன் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வந்தது.
இப்போது பாதியாக குறைந்து விட்டதற்கு, விளைச்சல் காலங்களில் போதிய விலை கிடைக்காமல் போவது
தான். எனவே விவசாயிகளை காப்பாற்ற, அரவக்குறிச்சியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அல்லது குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

