ADDED : அக் 22, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
குளித்தலை,:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. தொடர்ந்து பெய்த மழையிலிருந்து கொசுக்கள் உற்பத்தியை தடுக்கவும், மக்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மருதுார் டவுன் பஞ்., அலுவலர் அண்ணாமலை மேற்பார்வையில், துாய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும், கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.
கொசு தொல்லையில் இருந்து, இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நிம்மதியாக துாங்குவதற்காக, மாலை நேரங்களில் புகை மருந்து அடிக்கப்பட்டுள்ளது.
