/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : டிச 27, 2024 01:08 AM
கிருஷ்ணராயபுரம், டிச. 27-
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வளையர்பாளையம், தாராபுரத்தனுார், கோவக்குளம் ஆகிய பகுதிகளில், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் மக்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், டவுன் பஞ்சாயத்து சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
இதில் வீடுகளில் தேங்கியுள்ள கழிவு நீர் அகற்றுதல், பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் டயர்களை அப்புறப்படுத்துதல், நல்ல குடிநீரை மூடி வைத்தல், கொசுக்கள் பரவலை தடுக்கும் வகையில் அபெட் மருந்து தெளித்தல் என, துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.