ADDED : டிச 21, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொசு மருந்து அடிக்கும் பணி
கிருஷ்ணராயபுரம், டிச. 21-
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாராபுரத்தனுார், மஞ்சமேடு, பகவதியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் மழை காலங்களில் அதிகமான கொசுக்கள் பரவியது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் அவதிப்படுகின்றனர். டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நேற்று மாலை துாய்மை பணியாளர்கள், கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பணிகளை டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பார்வையிட்டார். வார்டுகளில் மழை நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு பணி நடந்தது.

