/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்-கோரி கலெக்டரிடம் தாய் மனு
/
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்-கோரி கலெக்டரிடம் தாய் மனு
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்-கோரி கலெக்டரிடம் தாய் மனு
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்-கோரி கலெக்டரிடம் தாய் மனு
ADDED : டிச 16, 2025 05:51 AM

கரூர்: காணாமல் போன தனது, 13 வயது மகளை கண்-டுபிடித்து தரக்கோரி, கரூர் மாவட்டம் மண்மங்-கலம் அருகே கடம்பன்குறிச்சியை சேர்ந்த லட்-சுமி, 45, என்பவர், தனது உறவினர்களுடன் கரூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்-டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது:
என் கணவர் கணேசன், காது கேளாத மாற்றுத்தி-றனாளி. இருவரும் கூலி வேலை செய்து வரு-கிறோம். எங்களது, 15 வயது மகள், 10ம் வகுப்பும், 13 வயது மகள், 8ம் வகுப்பும், என்.புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த, 12ம் தேதி இரண்டாவது மகளுக்கு உடல்-நிலை சரியில்லாததால், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அன்று மதியம், 2:00 மணிக்கு வேலை முடித்து வீட்டு வந்து போது, மகளை காணவில்லை. அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்த போது, அவர் எங்கு சென்றார் என்ற தகவல் கிடைக்கவில்லை. அன்று இரவு, 10:00 மணிக்கு வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளிக்க சென்ற போது, காலையில் வாங்க என்று திருப்பி அனுப்பினர். கடந்த, 13ம் தேதி வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (14ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இதுவரை, எனது மகள் எங்கு இருக்கிறார் என்று தெரிய-வில்லை. தினமும் நாட்டில் நடக்கும் சம்பவங்-களை பார்க்கும் போது, அச்சமாக இருக்கிறது. எனது மகளை கண்டுபிடித்து தர, மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

