/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தார்ச்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
தார்ச்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 16, 2025 05:51 AM
கிருஷ்ணராயபுரம்: சரவணபுரம் தார்ச்சாலை பகுதியில் பள்ளம் ஏற்-பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்-றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்து சரவணபுரம் பகுதியில் இருந்து தார்ச்சாலை பஞ்-சப்பட்டி, லட்சுமணம்பட்டி, முனையனுார் வரை செல்கிறது. வாகனங்களில் மக்கள் தினமும் செல்கின்றனர். தற்போது சரவணபுரம் தார்ச்சா-லையில் கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்-டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலத்தில் மழைநீர் பள்ளத்தில் தேங்கி வருகி-றது. அப்போது வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமமடைகின்றனர். எனவே, பள்ளத்தில் தற்-காலிகாமாக மண் கொட்டி நிரவி சமன்படுத்தி, வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

