/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண்மங்கலம் வாங்கல் ரயில்வே மேம்பாலம் சாலை சேதத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு

ADDED : மே 11, 2025 01:01 AM
கரூர், மண்மங்கலம் வாங்கல் ரயில்வே மேம்பாலம் சேதமடைந்து விட்டதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் -சேலம் இடையே போடப்பட்ட ரயில்வே இருப்பு பாதையில், கடந்த, 2013 முதல் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்போது, கரூர் மாவட்டம், பி.சி., காலனி அருகில் மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தை கரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் பயன்
படுத்தி வருகின்றனர்.
பாலத்தின் மேல் தளத்தில் பல இடங்களில் சாலை சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சாலை தொடர்ந்து சேதமாகி வருகின்றது.
உடனடியாக குண்டும், குழியுமான உள்ள சாலையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.