/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூடுதல் மின்விளக்கு தேவை வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
கூடுதல் மின்விளக்கு தேவை வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : செப் 12, 2025 02:09 AM
அரவக்குறிச்சி,
சின்னதாராபுரத்தில் இருந்து தென்னிலை செல்லும் சாலை, 15 கி.மீ., கொண்டதாகும். இதேபோல், சின்னதாராபுரத்தில் இருந்து க.பரமத்தி செல்லும் சாலை, 17 கி.மீ., கொண்டதாகும். இவ்விரண்டு சாலைகளிலும் ஒன்றிரண்டு தெருவிளக்குகளே உள்ளதால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன்
இச்சாலையை கடந்து வருகின்றனர்.
தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால், இச்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பஸ்கள் சென்று வரும் இச்சாலையில், ஒன்றிரண்டு தெருவிளக்குகள் மட்டுமே உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.