/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடிகால் தடுப்பு சுவர் இல்லை வாகன ஓட்டிகள் திணறல்
/
வடிகால் தடுப்பு சுவர் இல்லை வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : செப் 28, 2025 08:41 AM
கரூர் : சாலையோர வடிகாலுக்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடவூர், குளித்தலை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனைத்து வாகனங்களும் காந்திகிராமம் வழியாக செல்கின்றன. தெரசா கார்னர் பகுதியில் இருந்து, ரயில்வே மேம்பாலம் வரை காந்திகிராமம் பகுதியின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சாலையின் இருபுறமும், சாலையோரம் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சாலையோர வடிகால்கள் பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் உள்ளது.
இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் வழிவிட ஒதுங்கும் போது, தடுமாறி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் விழுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, சாலையோர வடிகாலுக்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.