/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறந்தவெளி மழைநீர் கால்வாய்அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
திறந்தவெளி மழைநீர் கால்வாய்அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திறந்தவெளி மழைநீர் கால்வாய்அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திறந்தவெளி மழைநீர் கால்வாய்அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 21, 2025 01:44 AM
கரூர், கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் உள்ள, மழைநீர் கால்வாய்கள் திறந்த நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
கரூர் ராம்நகர் உயர்மட்டம் பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம், மழைநீர் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், அவ்வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்வோர் மட்டுமின்றி, இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் கால்வாயில் விழும் அபாயம்
உள்ளது.மேலும், கால்வாயில் குப்பை குவிந்துள்ளதால், மழைநீர் சாலையில் ஓடுகிறது. எனவே, இணைப்பு சாலையோரம் உள்ள, மழைநீர் கால்வாய்களை சுத்தம் செய்து, அனைத்து இடங்களிலும் சிலாப் அமைத்து, உரிய முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

