/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
93 சதவீத வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
/
93 சதவீத வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
93 சதவீத வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
93 சதவீத வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
ADDED : நவ 21, 2025 01:45 AM
கரூர், ''மாவட்டத்தில், 93 சதவீத வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, 4 தொகுதிகளிலும், 8,98,362 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை, 93 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களை சார்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் நிமித்தமாகவோ அல்லது சொந்தமாக வீடு கட்டியோ இங்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்து வசித்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் ஒரு பகுதியாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வினியோகிக்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, திரும்ப பெறும் பணிகள் நடக்கிறது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு ஏதுவாக வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறும் போது, அதிலுள்ள விபரங்களை சரிபார்த்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் செயலியில் ஸ்கேன் செய்ய வேண்டும். இன்னொரு படிவத்தில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். இந்த பணிகளை, 1,055 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கணினியில் பதி வேற்றம் செய்யும் பணிக ளிலும், 600க்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

