/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
கரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 30, 2025 04:01 AM
கரூர்:கரூர் அருகே, பல மாதங்களாக வேகத்தடை சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்-றனர்.
கரூர் அருகே, அருகம்பாளையத்தில் அரசு பள்ளிகள், ஓட்டல்கள், டீ கடைகள், கூட்டுறவு வங்கி மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவ-னங்கள் உள்ளன. இதனால், அருகம்பாளையம் பகுதியில், போக்-குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலை, சேதம் அடைந்துள்ளது.
அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் அருகே அருகம்பாளையத்தில் வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.