/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : டிச 19, 2024 01:08 AM
கரூர், டிச. 19-
கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் அருகே, தொடக்கப்பள்ளி, கோவில்கள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். அமராவதி ஆற்றின் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கும், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இந்நிலையில், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.