/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளர்களை பாதிக்கும் இ.பி.எப்., விதி திருத்தம் மத்திய அமைச்சருக்கு எம்.பி.,ஜோதிமணி கடிதம்

ADDED : அக் 17, 2025 01:34 AM
கரூர், தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும், இ.பி.எப்., விதி திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட
வியாவிக்கு, காங்., கரூர் எம்.பி., ஜோதிமணி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின் கீழ், வேலை இழந்து, 12 மாதங்களுக்கு பிறகே ஒருவர் தனது, இ.பி.எப்., பணத்தை திரும்பப் பெற முடியும். 36 மாதங்களுக்கு பிறகே, ஓய்வூதிய நிதியை திரும்ப பெற முடியும்.
இ.பி.எப்., சேமிப்பில், 25 சதவீதம் கட்டாயமாக இருப்பு வைக்கப்படுகிறது. இதனால், 75 சதவீதம் மட்டுமே பெற முடியும். ஒரு தொழிலாளி தனது வேலையை இழந்தாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ, அவர் தனது உழைப்பால் சேமித்த சேமிப்பை அணுக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நடுத்தர வர்க்க குடும்பங்கள் செலவுகள் போன்றவற்றை சமாளிக்க போராடி வரும் நிலையில், இந்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இ.பி.எப்., என்பது ஊழியர்களின் மாதந்திர ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது. அரசு நிதி அல்ல. இம்மாதிரியான மாற்றங்கள், இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கிறது. இந்த புதிய விதிகளை உடனடியாக ரத்து செய்து, முந்தைய நடைமுறைகளை தொடர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.