/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காற்றாலை மின் பாதை அமைக்கும் பணியை கைவிட மா.கம்யூ., கோரிக்கை
/
காற்றாலை மின் பாதை அமைக்கும் பணியை கைவிட மா.கம்யூ., கோரிக்கை
காற்றாலை மின் பாதை அமைக்கும் பணியை கைவிட மா.கம்யூ., கோரிக்கை
காற்றாலை மின் பாதை அமைக்கும் பணியை கைவிட மா.கம்யூ., கோரிக்கை
ADDED : அக் 03, 2025 01:50 AM
கரூர், கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகில் கூனம்பட்டியில், மா.கம்யூ., கிளை கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், தென்னிலை அருகில், கூனம்பட்டி கிராமத்தில் மலையாள கருப்பண்ணசாமி கோவிலுக்கு அருகில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்த தெருவில் காற்றாலை மின் பாதை அமைப்பதற்கு மின் கம்பங்கள் நடப்பட்ட நிலையில் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பால் மின்வடகம்பிகள் இணைக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
உயர் மின் அழுத்தம் உள்ள மின்பாதை அமைக்கப்பட்டால் பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. காற்றாலை மின் பாதையை பாதிப்பில்லாத சாலை மார்க்கமாக கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கொண்டு செல்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி, கிளை செயலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.