sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பத்திரிகை, டி.வி.,க்களுக்கு நன்றி இசை அமைப்பாளர் தேவா

/

பத்திரிகை, டி.வி.,க்களுக்கு நன்றி இசை அமைப்பாளர் தேவா

பத்திரிகை, டி.வி.,க்களுக்கு நன்றி இசை அமைப்பாளர் தேவா

பத்திரிகை, டி.வி.,க்களுக்கு நன்றி இசை அமைப்பாளர் தேவா


ADDED : நவ 17, 2025 03:43 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''பத்திரிகை, டி.வி.,க்கள் மூலம் தான் திரைக்கு பின்னால் உள்ள கலைஞர்கள் வெளியே தெரிகின்றனர்,'' என இசை அமைப்-பாளர் தேவா தெரிவித்தார்.

கரூர் அருகே, கோடங்கிப்பட்டியில், வரும் ஜன., 17ல் இசை அமைப்பாளர் தேவாவின் இசை கச்சேரி நடக்கிறது. அதற்காக, டிக்கெட் அறிமுக விழா, நேற்று, கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

அதில், இசை அமைப்பாளர் தேவா பேசியதாவது:

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் நான் இசை அமைத்த பாடல்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை, இன்றைய தலைமுறையினர் ரசிக்கின்றனர். அதுவே எனக்கு போதும். இதனால், எனது பாடலுக்கு ராயல்டி கேட்பது இல்லை. சினிமாவில் நடிக்கும் கலைஞர்களை ரசிகர்களுக்கு நன்-றாக தெரியும். ஆனால், என்னை போல் திரைக்கு பின்னால், பணியாற்றும் கலைஞர்களை பத்திரிகை, டி.வி.,க்கள் மூலம் தான் ரசிகர்களுக்கு தெரிகிறது.

இதனால், ரசிகர்கள் எங்களை தேடி ஆட்டோ கிராப் வாங்கவும், போட்டோ எடுக்கவும் வருகின்றனர். இதற்கு காரணம், பத்தி-ரிகை மற்றும் டி.வி.,க்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கரூரில் வரும் ஜன., 17ல் இசை கச்சேரியில் நிறைய பாடகர்கள், பாட-கிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us