ADDED : நவ 20, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்,
முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய
ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
உதவி பொது
மேலாளர் சபாபதி தலைமை வகித்தார். ஜாதி, மத, மொழி பாகுபாடுகளை
எதிர்க்கும் வகையில், வன்முறையில் ஈடுபடாமல் மக்களின் உணர்வுப்பூர்வ
ஒற்றுமைக்கு பாடுபடவேண்டி தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி
ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனித வளம்)
வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
