/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய குடற்புழு நீக்க முகாம் தொடக்கம்
/
தேசிய குடற்புழு நீக்க முகாம் தொடக்கம்
ADDED : ஆக 12, 2025 01:12 AM
கரூர் கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடந்தது. இதை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், 1 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் என மொத்தம், 2,36,236 பேருக்கும், 20--30 வயதுடைய, 80,627 பெண்களுக்கும் (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து) அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
குடற்புழு நீக்க மாத்திரைகளை உண்பதால், குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்த சோகை வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மாணவ மாணவியரின் பள்ளி வருகை பாதிக்கப்
படாமல் தவிர்க்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இணை இயக்குனர் செழியன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.