/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்
ADDED : ஆக 14, 2025 02:14 AM
குளித்தலை, குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். இதில், 24 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள், பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சான்று வழங்கியதுடன், உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் திவாகர், மனநல மருத்துவர் லாவண்யா, பேச்சு பயிற்றுனர் கனகராஜ் மற்றும் முட நீக்கியல் வல்லுனர் விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக செயல்படுத்தப்படும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் தற்போது குளித்தலை வட்டத்தில் வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் பழனி அம்மாள், காளீஸ்வரி, மங்கையர்க்கரசி மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர் சுப்பையன் ஆகியோர் முகாமிற்கு மாற்றுத் திறனாளிகளை அழைத்து வந்தனர்.தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையிலும், வாரந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், வாரந்தோறும் புதன் கிழமை கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனையிலும் நடைபெறுகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வங்கி கடனுதவி, தொழில் பயிற்சி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.