/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய சாலை பாதுகாப்பு விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
/
தேசிய சாலை பாதுகாப்பு விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 21, 2025 06:51 AM
குளித்தலை: குளித்தலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழா நடந்தது.
குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், நேற்று தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபாலன், போக்குவரத்து எஸ்.ஐ., சரவ ணன், சாலை ஆய்-வாளர் சேகர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். பேரணியில், தமி-ழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை குறைத்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்-தில்லா தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து,
தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்ட மாட்டேன், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்ட மாட்டேன், குடிபோதையில் வாகன ஓட்ட மாட்டேன், அதி வேக-மாக வாகனங்களை இயக்க மாட்டேன், சீட்
பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்ட மாட்டேன், சாலை குறியீடுகளை மதித்து நடப்பேன், போக்குவரத்து காவலரின் கை அசைவுகளை மதித்து நடப்பேன், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க மாட்டேன், குறுகிய
பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாக-னத்தை முந்த மாட்டேன், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்க-ளுக்கு வழி விடுவேன், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லுாரி அருகே ஒலி எழுப்பமாட்டேன், நான் சாலை
விபத்திற்கு காரண-மாக இருக்க மாட்டேன், நான் சாலை விதிகளை பின்பற்றுவேன், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என அனைவரும் உறு-திமொழி ஏற்றனர்.பின்னர் சாலை பணியாளர்களின், பைக் ஹெல்மெட் விழிப்பு-ணர்வு பேரணி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து, பஸ் ஸ்டாண்டு, தாசில்தார் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதி-மன்றம், அரசு மாவட்ட தலைமை
மருத்துவமனை, சுங்க கேட் வழியாக திரும்பி விழிப்புணர்வு பேரணி உதவி கோட்ட பொறி-யாளர் அலுவலகத்தில் நிறைவுற்றது. பேரணியில் சாலை பணியா-ளர்கள், அலுவலக பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் கலந்து
கொண்டனர்.