/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், கருத்தரங்கு
/
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், கருத்தரங்கு
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், கருத்தரங்கு
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், கருத்தரங்கு
ADDED : அக் 04, 2025 01:21 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த வரவனை அரசு பள்ளியில், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், 'இளைஞரும், துாய்மை இந்தியாவும்' என்ற தலைப்பில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர்கள் அன்புச்செல்வன், சிவகாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்திவேல் திட்ட விளக்க உரையாற்றினார்.
இதில், மரக்கன்று நடுதல், முட்செடிகளை அகற்றுதல், பாதைகளை செப்பணிடுதல், அரசு பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, டெங்கு காய்ச்சல் குறித்து செயல்முறை விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை, கண்தானம், உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு, நீர் வளங்கள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.