/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு
/
கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு
கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு
கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு
ADDED : செப் 23, 2025 01:21 AM
கரூர் :துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஆயுதபூஜை வரை நவராத்திரி திருவிழா நடக்கும்.
நடப்பாண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியதை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. நன்செய் புகழூர் அக்ரஹாரம் துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரி தொடக்க நாளையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரி தொடக்க நாளையொட்டி, மூலவர் துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஏராளமான பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.