/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா
/
சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா
சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா
சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா
ADDED : ஜூலை 27, 2025 01:30 AM
கரூர், கரூர் சிவனடியார் திருக்கூட்டம், 30 வது ஆண்டு விழா மற்றும் 63 நாயன்மார்களின், 29 வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, 63 நாயன்மார்கள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபி ேஷகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், 63 நாயன்மார்களின் திருவீதி உலா, திருமுறை இன்னிசையுடன் நடந்தது.
இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை சிவனடியார் திருக்கூட்டம், 30 வது ஆண்டு விழா, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் புகழ் சோழர் மண்டபத்தில் நடக்கிறது. அதில், திருவாசகத்தில் அடியார் பெருமை என்ற தலைப்பில் பேராசிரியர் மாணிக்கவாசகம், 'அஞ்சேல் என்று அருள் செய்வான்' என்ற தலைப்பில் சைவ சித்தாந்த ஆசிரியர் சவுரிராசன் உள்பட பலர், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர். மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை ஓதுவார் மூர்த்தி ஜெகநாதனின், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.