/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் தேவை
/
சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் தேவை
ADDED : நவ 22, 2024 01:28 AM
சின்னதாராபுரத்தில்
பஸ் ஸ்டாண்ட் தேவை
அரவக்குறிச்சி, நவ. 22-
அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் அரசு பள்ளிகள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மின்வாரிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், காவல் நிலையம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர்.
சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், பொதுமக்கள் சாலையோரம் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கரூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலை என்பதால், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில் கல்குவாரிகள் செயல்படுவதால் கனரக வாகனங்கள் போக்கு
வரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையோரங்களில் நிற்கும் பயணிகள் மீது மோதும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதிக்கு பஸ் ஸ்டாண்ட் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.