ADDED : ஜூலை 15, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல்லுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. வெங்ககல்பட்டி மற்றும் வெள்ளியணை சாலையில் பாலத்தின் கீழ்பகுதியில் இருபுறமும் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில், மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.
மேலும், வழிகாட்டி பலகை, இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததால், திருச்சி தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இதனால், வெங்ககல்பட்டி பகுதி வெள்ளியணை சாலை பகுதியில், அமைக்கப்பட்டுள்ள புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
