ADDED : ஜூலை 04, 2025 01:17 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில், கல்குவாரிகள் அதிகரித்ததால் பாதி விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வதாரத்திற்காக செம்மறி ஆடுகள் வளர்ப்பிற்கு சென்று விட்டனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெறி நாய்கள் கடித்து நுாற்றுக்கணக்கான ஆடுகள் இறந்துள்ளன. ஆட்டு கொட்டகையில் அடைக்கப்படும் செம்மறி ஆடுகளை, நாய்கள் கடித்து அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், ஆடுகளை பாதுகாப்பதற்காக அரவக்குறிச்சியில் தற்போது ஆடு வளர்க்கும் விவசாயிகள் பரண் அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
செம்மறி ஆட்டு பரண் அமைப்பதால், மேலே ஆடுகள் சென்று தங்குவதால் வெறிநாய்கள் தொல்லை மற்றும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும், மேலும் ஆட்டு கழிவுகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை உரங்கள் கிடைப்பதாகவும், பரண் அமைப்பதற்கு செலவு தொகை அதிகமாக இருப்பதால் சிறிய அளவில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் பரன் அமைக்க முன்வர மறுக்கின்றனர். எனவே மத்திய, மாநில அரசு செம்மறி ஆடு வளர்க்கும் விவசாயிகளை பாதுகாப்பதற்காக மானியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.