/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சியில் புதிய கட்டட பணிகள் துவக்கம்
/
கரூர் மாநகராட்சியில் புதிய கட்டட பணிகள் துவக்கம்
ADDED : நவ 24, 2024 01:28 AM
கரூர் மாநகராட்சியில் புதிய
கட்டட பணிகள் துவக்கம்
கரூர், நவ. 24-
கரூர் மாநகராட்சி பகுதிகளில், பல்வேறு அரசு துறை சார்பில், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளின் தொடக்க விழா நேற்று நடந்தது.
அதில், 3.60 கோடி ரூபாய் செலவில், கூடுதல் கிளை நுாலக கட்டடம், புதிய கழிப்பிடம், அரசு பள்ளியில் புதிய சமையல் அறை, சுற்றுச்சுவர் கட்டுதல், மாநில வரி அலுவலகம் உள்ளிட்ட, பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கலெக்டர் தங்கவேல், மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், ஆணையாளர் சுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுஜாதா, மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.