/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்கவரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
/
நங்கவரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
ADDED : நவ 28, 2024 01:09 AM
நங்கவரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
குளித்தலை, நவ. 28-
குளித்தலை அடுத்த, நங்கவரம் பகுதி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாகும். இங்கு பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், நங்கவரத்தை தலைமையிடமாக கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த, 2023ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் நங்கவரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும்
என, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து குளித்தலை மற்றும் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் இருந்து, 12 பஞ்.,க்கள், 1 டவுன் பஞ்., என, 13 தாய் கிராமங்களை தனியாக பிரித்து (எஸ் .1) நங்கவரம் போலீஸ் ஸ்டேஷன்
தொடங்கப்பட்டது.
நேற்று காலை 9:30 மணிக்கு, கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
ஏ.டி.எஸ்.பி., பிரேமானந்தன், குளித்தலை டி.எஸ்.பி.,
செந்தில்குமார் முன்னிலை
வகித்தனர்.
புதியதாக திறக்கப்பட்ட ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் திலகவதி, எஸ்.ஐ.,சரவணகிரி, எஸ்.எஸ்.ஐ.,க்கள் முருகன், ராஜ்குமார் மற்றும் ஆறு போலீசார் பணியில் உள்ளனர்.