/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய வழித்தட நகர டவுன் பஸ்:எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு
/
புதிய வழித்தட நகர டவுன் பஸ்:எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு
புதிய வழித்தட நகர டவுன் பஸ்:எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு
புதிய வழித்தட நகர டவுன் பஸ்:எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு
ADDED : செப் 15, 2025 01:26 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., சவாரி மேடு கிராமத்தில் புதிய வழித்தட டவுன் பஸ் தொடக்க விழாவிற்கு, டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
நகர செயலாளர் சுப்பிரமணி, கவுன்சிலர்கள் குணசேகரன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், சவாரிமேட்டில் இருந்து நங்கவரம் வழியாக குளித்தலைக்கு வந்து செல்லும் டவுன் பஸ்சை தொடங்கி வைத்தார்.
இதேபோல், புரசம்பட்டி கிராமத்தில் டவுன் பஸ் புதிய வழித்தடத்தை, எம்.எல்.ஏ., மாணிக்கம் புரசம்பட்டியில் இருந்து நச்சலுார், நங்கவரம், பொய்யாமணி வழியாக குளித்தலை வந்து செல்லும் பஸ்சை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, அரசு போக்குவரத்து கழக மண்டல உதவி மேலாளர், குளித்தலை அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர், தொ.மு.ச., மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.