தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் ஐந்து சாலை பிரிவில் புதிய நிழற்கூடம் அமைப்பு

கரூர் ஐந்து சாலை பிரிவில் புதிய நிழற்கூடம் அமைப்பு

கரூர் ஐந்து சாலை பிரிவில் புதிய நிழற்கூடம் அமைப்பு


ADDED : பிப் 28, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் அருகே ஐந்து சாலை பிரிவில், புதிதாக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் அருகே உள்ள வாங்கல் பிரிவு மற்றும் பசுப-திபாளையம் சாலை, ஐந்து சாலை என அழைக்-கப்படுகிறது. கரூர் அருகே வாங்கல், நெரூர் உள்-ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் ஐந்து சாலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். அதே போல் வாங்கல், நெரூர் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள், பசுபதிபாளையம் செல்ல, ஐந்து சாலை பிரிவில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். இதனால், ஐந்து சாலை பிரிவில், பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருப்பது வழக்கம்.

ஆனால், ஐந்து சாலை பிரிவு பகுதியில் நிழற்-கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பொது மக்கள் அவதிப்பட்-டனர். இதனால், கரூர் ஐந்து சாலை பிரிவு பகு-தியில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளி-யானது.இதையடுத்து, கரூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியின், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஐந்து சாலை பிரிவில் புதிதாக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மகிழ்ச்சிய-டைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us