sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்


ADDED : ஜன 11, 2024 11:36 AM

Google News

ADDED : ஜன 11, 2024 11:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ-சேவை மையத்தில்

பொருட்கள் திருட்டு

வெள்ளியணை அருகே, இ-சேவை மையத்தில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயின.

கரூர் மாவட்டம், ராயனுார் தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன், 28; இவர், வெள்ளியணை அருகே வால்காட்டுபுதுார் பகுதியில், இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த, 9 ல் வாசுதேவன் இ-சேவை மையத்தை பூட்டி விட்டு, ஈரோடு சென்றுள்ளார். பிறகு, திரும்பி வந்து பார்த்த போது இ-சேவை மையத்தின் கதவு உடைக்கப்பட்டிந்தது.

மேலும், மையத்தில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, வாசுதேவன் கொடுத்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கிராம உதவியாளர்

சங்கத்தினர் உண்ணாவிரதம்

தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அரசகுமார் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கிராம உதவியாளர்களுக்கு, காலமுறை ஊதியமாக, 15 ஆயிரத்து, 700 ரூபாய் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். இறந்த கிராம உதவியாளர் குடும்பத்துக்கு சி.பி.எஸ்., இறுதி தொகையை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு, ஊர்திப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்தில், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், இணைச்செயலாளர் புஷ்ப வள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.

பழமையான கட்டடங்களை

அகற்ற மக்கள் கோரிக்கை

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், மிகவும் பழமையான கட்டடம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசவள்ளித்தெரு அருகில், பழமையான கழிப்பிடம் உள்ளது. இந்த கட்டடம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்தும் போது அச்சப்படுகின்றனர். மேலும் சிவன் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடம் வளாகத்தின் கட்டடமும் மோசமாக உள்ளது. தற்போது இந்த கட்டடம் பயன்படுத்தாமல் உள்ளது. கட்டடம் சுற்றி விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி, பழமையான கட்டடங்களை அகற்றுவதற்குடவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெ.காளிப்பாளையத்தில்

அங்கக பண்ணைய பயிற்சி

கரூர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில், நெரூர் வடக்கு பெரிய காளிப்பாளையத்தில், அங்கக பண்ணைய பயிற்சி முகாம்

நடந்தது.

அதில், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 26 பேர் பங்கேற்கும் இயற்கை முறை சாகுபடியாளர்கள் குழு அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், விதை சான்று பெறும் முறைகள், பஞ்ச காவ்யம் தயாரித்தல், பூச்சி விரட்டி தயாரித்தல் குறித்த செயல் முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

முகாமில், விதை சான்று இயக்குனர் மணி மேகலை, தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்செல்வி, அலுவலர் வீரமணி, இளநிலை ஆராய்ச்சியாளர் சவுமியா உள்பட பலர்

பங்கேற்றனர்.

வெள்ளியணை, தா.மலையில்

இரு பெண்கள் திடீர் மாயம்

வெள்ளியணை மற்றும் தான்தோன்றிமலையில், இரண்டு பெண்களை காணவில்லை.

கரூர் மாவட்டம், வெள்ளியணை துளசி கொடும்பூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி நாகலட்சுமி, 35; கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 8 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், திரும்பி வரவில்லை. நாகலட்சுமியின் உறவினர் மூர்த்தி, 28, கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்

பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* கரூர் அருகே தான்தோன்றிமலை டி.செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பவரது மகள் குல்சர் பாத்திமா, 19; டெக்ஸ் தொழிலாளி. இவர் கடந்த, 8 ல் வீட்டில் இருந்து, வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால், வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குல்சர் பாத்திமாவின், தாய் ஜலிமா பானு போலீசில் புகார் செய்தார்.

தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜெர்மன் ஜவுளி கண்காட்சியில்

இந்திய ஜவுளி அரங்கு திறப்பு

ஜெர்மனியில் நடந்து வரும், ஜவுளி கண்காட்சியில், இந்திய ஜவுளி நிறுவன அரங்கு திறப்பு விழா நடந்தது.

ஜெர்மன் நாட்டில், பிராங்பட் நகரில் மிகப் பெரிய ஜவுளி கண்காட்சி கடந்த, 9ல் தொடங்கி, நாளை வரை நடக்கிறது.

அதில், உலகம் முழுவதிலும் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், அரங்குகளை அமைத்துள்ளது. இந்தியாவில் இருந்து, 448 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளது. கரூரில் இருந்து, 69 ஜவுளி நிறுவனங்கள், ஜவுளி கண்காட்சியில் அரங்குகளை அமைத்துள்ளது.

இந்திய ஜவுளி நிறுவனங்கள் உள்ள கண்காட்சி அரங்கை, இந்திய ஜவுளி துறை, கைத்தறி மேம்பாட்டு பிரிவு கமிஷனர் டாக்டர் பீனா திறந்து வைத்தார். அப்போது, இந்தியாவுக்கான பிராங்பர்ட் நகரின் கவுன்சில் ஜெனரல் முபாராக், கைத்தறி துணி ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர்

பங்கேற்றனர்.

வர்த்தகம் மற்றும் தொழில்

கழக மகாசபை கூட்டம்

கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், 31 வது மகாசபை கூட்டம், தலைவர் ராஜூ தலைமையில் கரூரில் நடந்தது.

கூட்டத்தில், திருச்சி, கரூர், கோவை தேசிய நெடுஞ்சாலையை, ஆறு வழி சாலையாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள, கடுமையான சரத்துகளை மத்திய அரசு நீக்க வேண்டும், பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கரூரில் சுத்திகரிப்புடன் கூடிய சாயப்பூங்கா அமைக்க வேண்டும் உள்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

சட்ட விரோத விற்பனை

49 மதுபாட்டில் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 49 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 49 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக செந்தில் குமார், 48; கண்ணன், 57; சரவணன், 46; மாணிக்கம், 43; சண்முகம், 60, உள்பட ஆறு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மின்சாரம் தாக்கியதில்கூலி தொழிலாளி பலி

வேலாயுதம்பாளையத்தில், மின்சாரம் தாக்கியதில், கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள பேக்கரி முன், பழைய கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கூரையின் மேல்பகுதியில் உள்ள, மின்சார கம்பி, வெங்கடேஷ் மீது பட்டது. அதில், மின்சாரம் தாக்கியதில் வெங்கடேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து, வெங்டேஷின் மனைவி அலமேலு, 40; என்பவர் கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கந்தன்குடி கிராம சாலைதுாய்மை பணிகள் தீவிரம்

கந்தன்குடி கிராமத்தில், சாலை துாய்மை பணி தீவிரமாக நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கந்தன்குடி கிராமத்தில் இருந்து, சிவாயம் செல்லும் இருபுறமும் சாலையோரம் அதிகமான செடிகள் வளர்ந்தது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில், சாலையோரம் வளர்ந்த செடிகளை பஞ்சாயத்து நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு செடிகள் அகற்றும் பணி நடந்தது.

சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதால்

நாளுக்கு நாள் விபத்து அதிகரிப்பு

மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிறுவர்கள் அதிவேகமாக டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அரவக்குறிச்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், சிறுவர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை, பெற்றோரும் கண்டிக்காமல் விடுவதால், விபத்து அபாயம் நிலவுகிறது.

எனவே, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு

கரூரில், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த போலீஸ் ஏட்டு, அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்தவர் செந்தில் குமார், 38; மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு. இவர் நேற்று இரவு கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை, வாழைக்காய் மண்டி பகுதியில், காரை நிறுத்தி விட்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஒருவர் அரிவாளால், ஏட்டு செந்தில் குமாரை

வெட்டினார்.

அப்போது, தடுத்ததால் செந்தில் குமாருக்கு, கையில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த, கரூர் டவுன் போலீசார், செந்தில் குமாரை வெட்டிய நபரை, கைது செய்தனர். செந்தில் குமார், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

வருகிறார்.

கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

புன்னைவன நாதர் கோவிலில்

மார்கழி மாத சிவராத்திரி விழா

புன்னம்சத்திரம், புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில், நேற்று மார்கழி மாத சிவராத்திரி விழா

நடந்தது.

அதில், மூலவர் புன்னைவன நாதர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும், பவித்திரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகளூரில் உள்ள மேகமாலீஸ்வரர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில், மார்கழி மாத சிவராத்திரியையொட்டி, சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் நடந்தது.

செம்மண் கடத்திய

டிராக்டர் டிப்பர் பறிமுதல்

தரகம்பட்டியில், செம்மண் கடத்தலில் ஈடுபட்ட பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அடுத்த தரகம்பட்டியில், நேற்று முன்தினம் அதிகாலை வி.ஏ.ஓ., ரகு, 33, மற்றும் கிராம கண்காணிப்பு குழுவுடன் தரகம்பட்டி பகுதியில் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை, கரூர் தரகம்பட்டி நெடுஞ்சாலையில் தரகம்பட்டி சோபிகா ஹோட்டல் அருகே, பதிவு எண் இல்லாமல் அதிவேகமாக வந்த டிராக்டர் டிப்பர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி விட்டார்.

வருவாய் துறையினர் சோதனை செய்தபோது, அரசு அனுமதி இல்லாமல் ஒரு யூனிட் செம்மண் இருந்தது தெரியவந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து, சிந்தாமணிப்பட்டி போலீசிடம் ஒப்படைத்தனர்.

ரூ.2.75 லட்சத்திற்கு

பருத்தி வர்த்தகம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

மொத்தம், 120 மூட்டை பருத்தி வரத்தானது. இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,360 ரூபாய் முதல், 7,300 ரூபாய், டி.சி.எச்., 8,110 ரூபாய் முதல், 9,810 ரூபாய், கொட்டு பருத்தி, 3,360 ரூபாய் முதல், 4,860 ரூபாய் என, மொத்தம், 2.75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்த ஏலம் வரும், 18ல் நடக்கிறது என, மேலாளர் கணேசன்

தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us