/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பறவை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை இல்லை: கரூர் கலெக்டர்
/
பறவை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை இல்லை: கரூர் கலெக்டர்
பறவை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை இல்லை: கரூர் கலெக்டர்
பறவை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை இல்லை: கரூர் கலெக்டர்
ADDED : மே 05, 2024 02:17 AM
கரூர்:பறவை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை எதுவும் கிடையாது என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:ஆந்திரா,
கேரளா மாநிலத்தில் வாத்து மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய்
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் பறவை
காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இந்த மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும்
இல்லை. இது பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரல் தொற்று நோய். இந்நோய் கோழி,
வாத்து, வான்கோழி, நீர்பறவைகள், வன பறவைகள் ஆகியவற்றை முக்கியமாக
தாக்கும்.
நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள்,
கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழி தீவனம் மூலமாக
இந்நோய் பரவுகிறது. இதற்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க
நோய் தடுப்பு முறைகளையும், உயிர் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற
வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை மூலம், அனைத்து
கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளை, நேரில் பார்வையிட்டு மாதிரிகள்
சேகரிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.