/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'குடிநீர் ஆதாரங்களை சேதமாக்கும் கல்குவாரிக்கு அனுமதி தரக்கூடாது'
/
'குடிநீர் ஆதாரங்களை சேதமாக்கும் கல்குவாரிக்கு அனுமதி தரக்கூடாது'
'குடிநீர் ஆதாரங்களை சேதமாக்கும் கல்குவாரிக்கு அனுமதி தரக்கூடாது'
'குடிநீர் ஆதாரங்களை சேதமாக்கும் கல்குவாரிக்கு அனுமதி தரக்கூடாது'
ADDED : மே 10, 2024 07:26 AM
கரூர் : குடிநீர் ஆதாரங்களை சேதமாக்கும், கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், க. பரமத்தி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 756 கிராமங்களுக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. க.பரமத்தி அருகில், தலையூத்துப்பட்டியில் நீருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில், 20 அடி துாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
குவாரியில் வெடி மருந்து வெடிக்கும் போது, கற்கள் நீருந்து நிலைய கட்டடம் மீது விழுகிறது. அங்கிருந்து புழுதி வந்து தண்ணீரை மாசுப்படுத்தி வருகிறது. குவாரியை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு தலைமை செயலர் உத்தரவிட்டபடி அனைத்து கல்குவாரிகளையும், கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து வெடிமருந்து சேமிப்பு கிடங்குகளையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.