/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நைனாமலை மலைப்பாதை வழியாக செல்ல அனுமதியில்லை
/
நைனாமலை மலைப்பாதை வழியாக செல்ல அனுமதியில்லை
ADDED : செப் 20, 2025 02:11 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். தரிசனம் செய்ய, நாமக்கல் மட்டுமின்றி, சேலம், திருச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.
இதனால், புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். அப்போது, அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு, 3,600 படிகள் ஏறி வரதராஜ பெருமாளை தரிசிக்க பக்தர்கள் செல்வர்.
இந்நிலையில், பக்தர்கள் மலை மீதுள்ள கோவிலுக்கு எளிதாக சென்றுவர, 7 கி.மீ., துாரத்திற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது. அந்த சாலையில், இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படாமல் மண் பாதையாக உள்ளது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், வழக்கம்போல் படிக்கட்டு வழியாக செல்லலாம். மலைப்பாதையில் சாலை அமைக்கும் பணி நிறைவடையாத காரணத்தால், இந்தாண்டு மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.