/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை: மாயனுாருக்கு கூடுதல் தண்ணீர்
/
பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை: மாயனுாருக்கு கூடுதல் தண்ணீர்
பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை: மாயனுாருக்கு கூடுதல் தண்ணீர்
பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை: மாயனுாருக்கு கூடுதல் தண்ணீர்
ADDED : அக் 23, 2024 01:35 AM
பெ.ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர்
வரத்து இல்லை: மாயனுாருக்கு கூடுதல் தண்ணீர்
கரூர், அக். 23-
கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. மாயனுார் தடுப்பணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, மழை குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து, 739 கன அடியாக வந்தது. அமராவதி அணையில் இருந்து, நேற்று காலை ஆற்றில் வினாடிக்கு, 300 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 85.80 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து மீண்டும், ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 317 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 3,121 கன அடியாக அதிகரித்தது. காவிரியாற்றில், 426 கன அடியும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட, பாசன வாய்க்கால்களில், 720 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 57 கன அடி தண்ணீர் வந்தது. 29.71 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 21.97 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் அரவக்குறிச்சி, 2 மி.மீ, அணைப்பாளையம், 5.40 மி.மீ., க.பரமத்தி, 1 மி.மீ.,, கடவூர், 28 மி.மீ., மழை பெய்தது.