/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
/
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
ADDED : மார் 17, 2025 04:16 AM
கரூர்: தமிழகம் முழுவதும், ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்-தாண்டு மார்ச், 9ல் ஈர நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்-தது.
நேற்று, நிலப்பரப்புகளில் வாழும் பறவைகளின் கணக்கெடுப்பு பணி நடந்தது. இங்கு, பறவைகளின் எண்ணிக்கை, இனங்கள், எந்தெந்த பகுதிகளில் எவ்வகையான பறவையினங்கள் வாழ்கின்-றன என்பன போன்ற தகவல்கள் கணக்கெடுக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில், கடவூர் வனப்பகுதி, குளித்தலை மணத்தட்டை, ராஜேந்திரம், சின்ன தாதம்பாளையம் உள்ளிட்ட காப்புக்காடுகள், நொய்யல், புகழூர் உள்ளிட்ட சம நிலப்பரப்புகளில், மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமையில், பறவைகள் கணக்கெ-டுப்பு பணி நடந்தது. கரூர் வனக்கோட்ட களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என, 100 பேர் பங்கேற்றனர். அது மட்டுமின்றி, ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்தது.