/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே நெல் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்
/
கரூர் அருகே நெல் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்
கரூர் அருகே நெல் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்
கரூர் அருகே நெல் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்
ADDED : அக் 05, 2024 01:04 AM
கரூர் அருகே நெல் நாற்று நடும்
பணியில் வடமாநில தொழிலாளர்கள்
கரூர், அக். 5-
கரூர் அருகே, நெல் நாற்று நடும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து, சம்பா சாகுபடி பணிக்காக ஆற்றில் வினாடிக்கு, 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அமராவதி ஆற்றின் கரூர் மாவட்ட பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை மற்றும் கரூர் பஞ்., யூனியன் பகுதிகளில், நெல் நாற்று நடும் பணிகள் தொடங்கியுள்ளது.
ஆனால், உள்ளூரில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, கரூர் அருகே சுக்காலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நெல் நாற்று நடும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ' தேசிய ஊரக, 100 நாள் வேலை திட்டம், விவசாய பணிகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், விவசாய கூலி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தின அடிப்படையில், கூலி கேட்காமல் ஏக்கர் அடிப்படையில் கூலி பேசி, விரைவாக நெல் நாற்று நடும் பணியை செய்து முடிக்கின்றனர்,' என்றனர்.