/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபைல் போன் விபரீதம் வடமாநில தொழிலாளி பலி
/
மொபைல் போன் விபரீதம் வடமாநில தொழிலாளி பலி
ADDED : மே 13, 2025 01:23 AM
கரூர், கரூரில், தனியார் மருத்துவமனை கட்டடத்தில் அமர்ந்து கொண்டு, மொபைல் போனில் பேசிய, வட மாநிலத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியர், தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலம், அலிபுத்துவர் பகுதியை சேர்ந்தவர் பிந்து சக்கரவர்த்தி, 35; கரூர்-கோவை சாலையில் உள்ள, நாச்சிமுத்து மருத்துவமனையில், கடந்த இரண்டாண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 4ல் இரவு பிந்து சக்கரவர்த்தி, மருத்துவமனை கட்டடத்தில் அமர்ந்து கொண்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த பிந்து சக்கரவர்த்திக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பிந்து சக்கரவர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து, தனியார் மருத்துவமனை மேலாளர் ராஜசேகர், 38, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.