/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை மக்களுக்கு நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
/
குளித்தலை மக்களுக்கு நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
ADDED : செப் 26, 2024 03:21 AM
குளித்தலை மக்களுக்குநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
குளித்தலை, செப். 26-குளித்தலை நகராட்சி கமிஷனர் நந்தகுமார், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குளித்தலை நகராட்சி பகுதியில் அம்ருத், 2.0 திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வந்த குடிநீர் மேம்பாட்டு பணிகள், தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. சோதனை ஓட்டமாக பழைய பகிர்மான குழாய் மூலம் காலை நேரத்திலும், புதிய பகிர்மான குழாய் மூலம் மாலை நேரத்திலும் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.புதிய பகிர்மான குழாய்களில், குடிநீர் வினியோகத்தின் போது புகார்கள் இருப்பின், உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும் பொதுப்பணி மேற்பார்வையாளரை, 87548 90727 என்ற எண்ணிலும், குழாய் பொருத்துனரை, 97883-13879 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.